அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு இதேபோல, உத்தரகாண்ட் மாநிலத்திலும் நள்ளிரவு ஒரு மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் சிமோலி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 3.8 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாகவும், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.ஆனால் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியில் மக்கள் சிலர் பீதி அடைந்து, வீடுகளில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.