இந்தியா

குப்பைத்தொட்டிக்கு அபிஷேகம் செய்த பெண்கள்: இப்படியும் ஒரு வினோத வழிபாடு!

குப்பைத்தொட்டிக்கு அபிஷேகம் செய்த பெண்கள்: இப்படியும் ஒரு வினோத வழிபாடு!

rajakannan

பீகார் மாநிலத்தில் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கங்காரு வடிவிலாக குப்பைத் தொட்டிக்கு பெண்கள் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

இந்தியாவில் பல்வேறு விதமான கடவுள் பக்தி மற்றும் நம்பிக்கைகளை கொண்டவர்கள் உள்ளனர். பல்வேறு வழிபாட்டு முறைகள் இந்தியாவில் உள்ளன. விலங்குகள், மரங்கள், பாறைகள் உள்ளிட்டவற்றை வழிபடுவர்களும் உண்டு. அந்தவகையில் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கங்காரு வடிவிலான குப்பைத் தொட்டியை பெண்கள் வழிபடுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த கங்காரு வடிவ குப்பைத்தொட்டியை முதலில் பெண்கள் சிலர் வணங்க தொடங்கினர். அவர்களை பார்த்து மேலும் பலர் வழிபட தொடங்கினர். காங்காருவிற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கங்காரு குப்பைத்தொட்டி இருக்கும் இடம் வழிபாடு இடமாக மாறியது. கங்காருவை பெண்கள் வழிபடுவது போன்ற இந்த 23 நொடி வீடியோ பார்த்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் இது மூடநம்பிக்கையின் உச்சம் என்று கூறியுள்ளனர். இந்த வழிபாடு எங்கு நடைபெறுகிறது என்பது வீடியோ பதிவில் இல்லை. இருப்பினும் பீகாரில் உள்ள கோவில் ஒன்றில் இது நடைபெற்று வருவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.