இந்தியா

வட மாநிலங்களில் துர்காஷ்டமி பண்டிகை: கோலாகல கொண்டாட்டம்

kaleelrahman

வட மாநிலங்களில் துர்காஷ்டமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

துர்கா பூஜைக்கு பிரசித்தி பெற்ற மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் காளி சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொல்கத்தா, அசன்சோல் உள்ளிட்ட நகரங்களில் பெண்கள் ஏராளமானோர் துர்கா பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டு நடனமாடினர்.

ஒடிஷாவில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான லட்டுகள் தயாரிக்கப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் குஜராத்தின் சூரத் நகரத்திலும் துர்காஷ்டமி வழிபாடுகளில் திரளானோர் பங்கேற்றனர். கைகளில் விளக்குகளை ஏந்தியபடி அவர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.