பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் மற்றும் கள்ள நோட்டுகளை வழங்குவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை அவர்களுக்கு பேரிடியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், “பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் மற்றும் கள்ள நோட்டுகளை வழங்குவோருக்கு முதுகெலும்பை நடுங்க வைக்கும் வகையில் தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று கூறினார்.
மேலும், “வடகிழக்கு மாநிலங்களில் நக்ஸல் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள் குறைந்து வருகின்றன. தேசிய புலனாய்வு முகமை விசாரித்த வழக்குகளில் 95 சதவிகிதம் குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன” என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.