இந்தியா

காவிரி ஆற்றில் 26,000இல் இருந்து 20,000 கன அடியாகக் குறைந்த நீர்வரத்து

JustinDurai
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் விநாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால், காவிரி ஆற்றில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம், 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மழை குறைந்ததால், நேற்று 26 ஆயிரம் கன அடியாகக் குறைந்த நீர்வரத்து, இன்று 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. ஆனாலும் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இந்த வெள்ளப்பெருக்கால், ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.