டெல்லி பேருந்து ஓட்டுநரின் மகன் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பாராட்டியுள்ளார்.
டெல்லியை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் மகன் பிரின்ஸ் குமார். இவர் இன்று வெளியான 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதனையடுத்து அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பிரின்ஸ் குமாரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மிகவும் பெருமைப்படக்கூடிய தருணம் எனவும் சிசோடியா புகழ்ந்துள்ளார்.
இதேபோல 168 அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றிருப்பதாக மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். டெல்லியில் 90.64 சதவீத மாணவ மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.37 சதவீதம் அதிகம் ஆகும்.