இந்தியா

குடிபோதையில் தீ வைத்த இளைஞர் - 27 இருசக்கர வாகனங்கள் நாசம்

குடிபோதையில் தீ வைத்த இளைஞர் - 27 இருசக்கர வாகனங்கள் நாசம்

webteam

மஹாராஷ்டிரா அருகே உள்ள பகுதியில் குடிபோதையில் ஒருவர் வைத்த தீயால் 27 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. 

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஜனதா வசாஹத் என்ற பகுதியில் குடிபோதையில் வந்த ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீ அடுத்தடுத்து அருகில் இருந்த வாகனங்களில் பரவியது. இதில், 27 இரு சக்கர வாகனங்களும்,1 ஆட்டோ மற்றும் 2 சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நீலேஷ் பாட்டீல் என்பவர் குடிபோதையில் வாகனங்களுக்கு தீவைத்ததும், தனது விரோதிகளின் வண்டிகளுக்கு அவர் தீ வைத்து எரிப்பது வழக்கம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.