பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் வருவாய் குறைந்துள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு ஆயிரத்து 46 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோயில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் கூறியுள்ளார். ஆனால், கடந்தாண்டு 995 கோடி ரூபாய் தான் காணிக்கை கிடைத்துள்ளாதக தெரிவித்துள்ளார். காணிக்கையில் 48 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அணில்குமார் குறிப்பிட்டுள்ளார்.