இந்தியா

விவசாயக் கடன் தள்ளுபடியில் அவசரம் வேண்டாம்: மத்திய அரசுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்

விவசாயக் கடன் தள்ளுபடியில் அவசரம் வேண்டாம்: மத்திய அரசுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்

webteam

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது, இதனால் அரசின் நிதி நிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. அப்போது வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படாது என்ற முடிவு எடுக்கப்பட்டது. எனினும் தங்கத்திலும் அரசு கடன் பத்திரங்களிலும் வங்கிகள் செய்ய வேண்டிய குறைந்த பட்ச முதலீட்டு அளவான எஸ்எல்ஆர் அரை சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் அரசின் நிதி நிலை பாதிக்கப்படுவதுடன் பணவீக்க பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.