செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த சர்ச்சைக்குரிய கருத்து கர்நாடகாவில் கடும் எதிர்ப்பை கிளம்பியுள்ளது தக் லைஃப் படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர், முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்தனர். அப்போது, 'தக் லைஃப்' படத்தை வெளியிட வேண்டாம் என்றும், சட்ட ரீதியாக அரசு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்
கர்நாடகாவில் படம் வெளியிடுவதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால். திரைப்பட வர்த்தக சபை மாநில அரசின் ஆதரவை நாடியுள்ளது. இது தொடர்பாக, இன்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்த திரைப்பட வர்த்தக சபையின் நிர்வாகிகள், 'தக் லைஃப்' படத்தை மாநிலத்தில் திரையிட வேண்டாம் என்று தானாக முன்வந்து கேட்டுக் கொண்டனர்
இந்த நேரத்தில் மாநில அரசு சட்டப்பூர்வமாக ஒத்துழைப்பை வழங்கும் என்று சித்தராமையா உறுதியளித்துள்ளார். மேலும் கன்னட பிரச்னையில் அனைவரும் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.