இந்தியா

முல்லை பெரியாறு அணை விவகாரம் - தமிழக அரசு புதிய பதில் மனு

முல்லை பெரியாறு அணை விவகாரம் - தமிழக அரசு புதிய பதில் மனு

கலிலுல்லா

முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மையை அதன் ஆண்டுகளை வைத்து கணக்கிடக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணையில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து, அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரும்
கேள்வி எழுப்பி வருகின்றனர். அணை பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அணையின் வயதை வைத்து கணக்கிடாமல் பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உறுதித்தன்மையை கணக்கிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும், பெருமழை மற்றும் வெள்ளக்காலத்தில் நீரை சேமித்து வழங்குவதன் அடிப்படையில் அணையின் ஆயுளை கணக்கிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் வயதை குறிப்பிட்டு பலவீனமாக உள்ளதாக கேரள அரசு கூறிய குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.