இந்தியா

“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்

“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்

webteam

‘ஜெய்ஸ்ரீ ராம்’ என்று சொல்லி அரவணைக்க வேண்டுமே தவிர கோஷமிட வற்புறுத்தக்கூடாது என்று மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில்‌ திருட வந்த இளைஞர் ஒருவரை ஜெய்ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும் கோஷமிடச் சொல்லி தாக்கியபோது அந்த இளைஞர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 1‌1 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‌இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, இதுபோன்ற சம்பவங்களை நியாயப்படுத்த முடியாது என்று கூறினார். 

அத்துடன் ஜெய்ஸ்ரீ ராம் என்று சொல்லி அரவணைக்க வேண்டுமே தவிர கோஷமிட வற்புறுத்தக்கூடாது என்றும்‌ தெரிவித்துள்ளார். ‌மத்திய அரசின் நேர்மறையான சூழ்நிலையை கெடுப்பதே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கமாக ‌இருந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.