இந்தியா

உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - விமானநிலைய இயக்குனரகம் தகவல்

உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - விமானநிலைய இயக்குனரகம் தகவல்

webteam

கடந்த மாதத்தில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை 16 சதவிகிதம் அதிகரித்ததாக விமான நிலைய இயக்குனரகம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

2017 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் உள்நாட்டு பயணிகள் வளர்ச்சி 16.97 சதவீதமாக உள்ளது. கடந்த மாதத்தில் விமான இருக்கைகளில் சராசரியாக 84 சதவிகிதம் பயணிகளால் பயன்படுத்தப்பட்டதாகவும், எல்லா விமான நிறுவனங்களும் சேர்த்து 97 லட்சம் பயணிகள் விமானங்களில் பயணம் செய்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தல் 84 லட்சம் பயணிகள் விமான பயணம் செய்திருந்த நிலையில், அது இந்த ஆண்டு 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.