நாய் எக்ஸ் தளம்
இந்தியா

தானே டூ டொராண்டோ.. தெரு நாய் ஒன்று வெளிநாட்டிற்குப் பறந்த சுவாரஸ்ய கதை!

மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த தெரு நாய் ஒன்று கனடா நாட்டில் தத்தெடுக்கப்பட்டுள்ளது.

Prakash J

கனடா நாட்டைச் சேர்ந்த சலீல் நவ்கரே என்ற நபர், கடந்த ஆண்டு இறுதியில், மகாராஷ்டிராவின் தானேவின் வர்தக் நகர் பகுதியிலுள்ள தனது பெற்றோரின் வந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் ’ராணி’ எனப் பெயரிடப்பட்ட பெண் நாய் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சில நாள்கள் அந்த நாயுடன் பழகிய சலீல், ப்ளாண்ட்ஸ் அண்ட் அனிமல்ஸ் வெல்ஃபேர் சொசைட்டி எனும் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அதனை பராமரித்து வந்ததுள்ளார்.

நாய்

பின்னர், அவர்களால் அந்த நாய் தற்காலிக தங்குமிடத்தில் சேர்க்கப்பட்டு, அதற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், ராணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அது பயணம் செய்ய தகுதியடைந்ததனால், சலீல் செல்லப்பிராணி போக்குவரத்து நிபுணரின் உதவியை நாடினார். அவர்மூலம் அதன் இடமாற்றத்திற்குத் தேவையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த ராணி நாயானது, கடந்த மார்ச் 21ஆம் தேதி கனடாவின் டொராண்டோவிலுள்ள சலீல் வீட்டை அடைந்து தனது புதிய குடும்பத்துடன் இணைந்துள்ளது.