இந்தியா

கொலையை தடுத்து ஹீரோவாக மாறிய நாய்: நெகிழ்ச்சி சம்பவம்!

கொலையை தடுத்து ஹீரோவாக மாறிய நாய்: நெகிழ்ச்சி சம்பவம்!

webteam

டெல்லியில் வளர்ப்பு நாய் ஒன்று, கொலையாளிகளிடம் இருந்து தனது உரிமையாளரை காப்பாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

டெல்லி மங்கோல்புரி பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவர் சிவில் ஏஜென்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ராகேஷ் தனது வளர்ப்பு பிராணியான டைசனுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள் கத்தியுடன் அவரை தாக்க முயற்சித்துள்ளனர். இதை கண்ட டைசன் அவர்கள் மீது பாய்ந்து கொடூரமாக தாக்கி உள்ளது. மேலும் தன்னுடைய உயிரை பணயம் வைத்து அவர்களுடன் போராடி ராகேஷை காப்பாற்றி உள்ளது.

டைசன் தாக்கியதால் காயமடைந்த அவர்கள் அந்த இடத்தை வீட்டு தப்பி ஓடியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட அனைவரும் வளர்ப்பு பிராணியான டைசனை புகழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.