இந்தியா

என்டிடிவி-ஐ வாங்குகிறாரா பாபா ராம்தேவ்....

என்டிடிவி-ஐ வாங்குகிறாரா பாபா ராம்தேவ்....

Rasus

என்டிடிவி. தொலைகாட்சியை யோகா குரு பாபா ராம்தேவ் வாங்க முயற்சி செய்வதாக வந்த
செய்தியை அவரது பதஞ்சலி நிறுவனம் மறுத்துள்ளது.

டெல்லியில் உள்ள என்டிடிவி துணை நிறுவனர் மற்றும் நிர்வாக துணை தலைவர் பிரணாய்
ராய் வீட்டில் இன்று சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரபல யோகா குரு
பாபா ராம்தேவ் என்.டி.டி.வி-ஐ வாங்க முயற்சி செய்து வருவதாகவும், அதனால்தான் மத்திய
அரசு பிரணாய் ராய்க்கு நெருக்கடி அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டு
ஆதாரமற்றது என்றும், இந்த செய்தி முற்றிலுமாக பொய்யானது என்றும் பதாஞ்சலி
நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் டிஜிர்வால் தெரிவித்துள்ளார்.
வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராய் அவரது
மனைவி ராதிகா ராய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில்
அவர்களது வீடு உட்பட 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. என்டிடிவி நிறுவனர் பிரணாய்
ராய், பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ., எம்.பி. சுப்ரமணியசாமி கடந்த ஆண்டு, பிரதமர்
மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கான ஆதாரங்களையும் இணையதளம் ஒன்றில்
சுப்ரமணியசாமி நேற்று வெளியிட்டார். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் சோதனை
நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.