இந்தியா

காந்தத்தை முழுங்கிய குழந்தைக்கு காந்த சிகிச்சைக் கொடுத்த டாக்டர்கள்!

காந்தத்தை முழுங்கிய குழந்தைக்கு காந்த சிகிச்சைக் கொடுத்த டாக்டர்கள்!

webteam

குழந்தையின் தொண்டையில் சிக்கிய காந்தத்தை டாக்டர்கள் வித்தியாசமான முறையில் சிகிச்சை அளித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

மங்களூரில் உள்ள கேம்எம்சி மருத்துவனைக்கு ஒன்பது வயது பெண் குழந்தையை அவரது பெற்றோர் பதற்றத்தோடு தூக்கிக்கொண்டு வந்தனர். ’விளையாடிக்கொண்டிருந்த இவள் சிறிய வகை பொம்மை காந்தத்தை முழுங்கிவிட்டாள். மூச்சு விடத் தவிக்கிறாள், உடன டியாகக் காப்பாற்றுங்கள்’ என்று கண்ணீர் விட்டனர். இப்படியொரு விசித்திரமான பிரச்னையை டாக்டர்கள் இதுவரை சந்திக்காததால் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் மருத்துவமனையின் அனைத்து டாக்டர்களும் கூடி பேசினர். இது சவாலான பிரச்னைதான். முயற்சி செய்வோம் என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அந்த காந்தம் வலது நுரையீரல் அருகே மூச்சுக்குழாயில் சிக்கியிருப்பது தெரிந்தது. பின்னர் உடனடியாக ஆபரேஷன் தியேட்டருக்குக் குழந்தையைக் கொண்டு சென்றனர். 

அங்கு ஆலோசனை செய்யப்பட்டது. எப்படி ஆபரேஷன் செய்தாலும் அது சிக்கலாகத்தான் முடியும் என்று நினைத்தனர். பின்னர் குழந்தை முழுங்கிய காந்தத்தை விட அதிக சக்திக்கொண்ட சிறு காந்தத்தை வரவழைத்தனர். அதை அப்படியே நுரையீரலுக்கு அருகே கொண்டு சென் றனர். அந்தக் காந்தத்தில் குழந்தை முழுங்கிய பொம்மை காந்தம் ஒட்டிக்கொண்டது. பிறகு அப்படியே மெதுவாக வெளியே எடுத்தனர். இது பெரிய சாதனைதான், குழந்தை மறுநாள் வேறு எந்த சிகிச்சையுமின்றி நலமாக வீட்டுக்குச் சென்றது’ என்று அந்த மருத்துவமனையின் டாக்டர் ஜோஷி தெரிவித்துள்ளார்.