மருத்துவமனையில் திடீரென மின்சாரம் நின்றதால் மொபைல் போன் டார்ச் லைட் மூலம் டாக்டர்கள் ஆபரேஷன் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி ஆபரேஷனில் தியேட்டரில், பிளாஷ்டிக் சர்ஜரி நடந்துகொண்டிருந்தது. டாக்டர் ஸ்மிதா சங்கர் சக டாக்டர்களுடன் ஆபரேஷன் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் நின்றுவிட்டது. இருட்டில் தவித்த டாக்டர், உடனடியாக செல்போன் டார்ச் லைட்டை ஆன் செய்தார். அந்த வெளிச்சத்தில் ஆபரேஷனை தொடர்ந்து செய்துள்ளார். இந்தச் சம்பவம் இப்போது வெளியே தெரிய வந்துள்ளது.
இதுபற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாவுரி ராஜூ நாயுடு கூறும்போது, ’மொபைல் டார்ச் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்த டாக்டர்களை பாராட்டுகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டக் கூடியது. மருத்துவமனையில் மின்சார வேலைகள் நடந்துவருதால் மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில், நின்ற மின்சாரம் வந்துவிட்டது’ என்றார்.
ஆனால், அங்குள்ள ஊழியர்கள், ‘நிதி வசதி இல்லாததால் ஆபரேஷன் தியேட்டர்களில் போதுமான வசதிகள் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளனர். இதை கண்காணிப்பாளர் மறுத்துள்ளார்.