ஜம்முவின் ரஜோரி மாவட்டத்திலுள்ள பாதல் கிராமத்தில், இனங்காண இயலா நோய் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு இதுவரை, 3 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நோய் பரவலை தடுக்க 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சில கிராமவாசிகள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, அக்கிராமத்தினரின் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றில் ஏதாவது கலந்துள்ளதா என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், மருத்துவ அவசர நிலையை கருதி, ரஜோரியில் மருத்துவர், மருத்துவ உதவியாளர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, உயிரிழந்த சிலரின் உடலில், நியூரோடாக்சின் என்ற ரசாயான மாதிரி கண்டறியப்பட்டுள்ளதால், அதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.