12 வயது சிறுவன் ஒருவன் அரிய வகை நோயின் தாக்கத்தினால் அவனது கை 12 அங்குலம் அளவிற்கு பெரியதாகியுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டாரிக் (12). பிறக்கும் போதே அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு சாதரணமான மனிதனை விட பெரிய கை விரல்களைக் கொண்டுள்ளார். அவரது கைகள் தற்போது 12 அங்குலத்திற்கு நீண்டுள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துவந்த அவர் தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக சிகிச்சையை நிறுத்திக் கொண்டார்.
இது குறித்து டாரிக் கூறுகையில், “என்னுடைய கைகள் பெரிதாக இருப்பதால், பள்ளிகளில் படிக்க என்னை அனுமதிக்கவில்லை. மாணவர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் ஒதுக்கி வைக்கின்றனர். இந்த நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது எனக்கு வந்த சாபம் என பலர் என்னை உதாசீனப்படுத்துகின்றனர். என் அப்பா இறந்த பின் வீட்டில் கஷ்டம் ஏற்பட்டது. அதனால் என்னால் சிகிச்சையை தொடர முடியவில்லை. மற்ற குழந்தைகளைப் பார்க்கும்போது எனக்கும் அவர்களை போல் விளையாட வேண்டும். படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என ஏக்கத்துடன் தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “டாரிக்கின் பிரச்னை உண்மையில் எங்களுக்கு ஒரு மர்மம். இதற்கு முன்னர் இது போன்ற நோயாளியை நாங்கள் பார்த்ததில்லை. யானைக் கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நிறைய பார்த்திருக்கிறோம். இன்றைய விஞ்ஞான உலகில் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது என்பது இல்லை. நிச்சயம் இந்த நோயை குணமாக்கலாம்” என்று கூறுகின்றனர்.