இந்தியா

புது மனைவியுடன் தங்க வைத்து சித்ரவதை - டாக்டர் மீது முதல் மனைவி புகார்

புது மனைவியுடன் தங்க வைத்து சித்ரவதை - டாக்டர் மீது முதல் மனைவி புகார்

webteam

புது மனைவியுடன் தங்க வைத்து சித்ரவதை செய்வதாக டாக்டர் ஒருவர் மீது அவரது முதல் மனைவி புகார் அளித்துள்ளார். 

புகார் அளித்த பெண்ணும் மருத்துவர்தான். அவரும் அவரது கணவரும் மும்பையில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த இந்தப் பெண் கணவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இவர்களின் திருமணம் நவம்பர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. 

இதுகுறித்து அவர் அளித்த புகாரில், “தன்னை தொடர்ந்து பணம் கேட்டு என் கணவர் சித்ரவதை செய்கிறார். மேலும் பல விவகாரங்களில் தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தி வந்ததோடு, இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த உடனேயே கணவரும் அவரது வீட்டாரும் என்னை துன்புறுத்த தொடங்கினர்.  கருத்தரித்த நிலையிலும் உள்ளாட்சி தேர்தலில் நிற்க என்னை வற்புறுத்தினார், ஆனால் நான் தேர்தலில் தோல்வியுற்றேன்.

எங்களுக்கு திருமணமான நாள் முதல் என்னுடைய சமையல் சரியில்லை என்று கொடுமை படுத்தியதோடு இன்னொரு திருமணமும் செய்து கொண்டுள்ளார். அந்தப் புது மனைவியுடன் என்னை தங்க வைத்து சித்ரவதை செய்கிறார்.” என தெரிவித்திருந்தார். 

இந்தப் புகார் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.