இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையில் புதிய அறிகுறிகள் தெரிவதாக மருத்துவர் பழனியப்பன் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
“கடந்த மார்ச்சில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். ஆனால் தற்போது லட்சத்தை கடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் சுதந்திரமாக எதையும் கண்டு கொள்ளாமல் வெளியில் வருகின்றனர். முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது மற்றும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளாததும் தான் இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்க காரணம். இதனை தடுக்க வேண்டுமெனில் தடுப்பு மருந்து மட்டும் தான் ஒரே வழி” என்கிறார். மருத்துவர் பழனியப்பன் மாணிக்கத்தின் முழுமையான பேச்சை இந்த வீடியோவில் காணலாம்.