இந்தியா

நீதிமன்ற நடைமுறைகளை வீடியோ எடுத்த மருத்துவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

நீதிமன்ற நடைமுறைகளை வீடியோ எடுத்த மருத்துவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

rajakannan

நீதிமன்ற நடைமுறைகளை அனுமதியின்றி மொபைல் போனில் வீடியோ எடுத்த மருத்துவருக்கு மும்பை உயர்நீதிமன்ற கிளை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஊராட்சி தலைவர் ஒருவரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊராட்சி தலைவரின் கணவருடைய நண்பரான மருத்துவர் விக்ரம் ஷ்ரிதர் ராவ் தேஷ்முக் நீதிமன்றத்தில் இருந்தார். 

நீதிமன்றத்தில் நடைபெறும் சம்பவங்களை அவர் தன்னுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை, நீதிமன்ற ஊழியர் ஒருவர் கவனித்து நீதிபதியிடம் கூறியுள்ளார். உடனடியாக மருத்துவர் தேஷ்முகின் மொபைல் போனை உடனடியாக ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். அந்த மொபைல் போனை சோதனை செய்த போது வீடியோ எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவரின் ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்ய நீதிபதி ரவிந்திர வி குஜ் உத்தரவிட்டார். விசாரணை முடியும் வரை அவை நீதிமன்ற பதிவாளரிடம் இருக்கும் என அவர் தெரிவித்தார். அத்துடன், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டி மருத்துவருக்கு ரூ50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.