cough syrup ani
இந்தியா

ம.பி.| இருமல் மருந்து சாப்பிட்டு உயிரிழந்த குழந்தைகள்.. தொடர்புடைய மருத்துவர் கைது!

வடமாநிலங்களில் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பான செய்திகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதுடன் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

வடமாநிலங்களில் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பான செய்திகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதுடன் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பான செய்திகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதுடன் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பல குழந்தைகளுக்கு ’கோல்ட்ரிஃப் சிரப்’ இருமல் மருந்தை பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் பராசியாவில் உள்ள அவரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

cough-syrup

தவிர, அம்மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து உற்பத்தியாளரான ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இருமல் சிரப் கொடுக்கப்பட்ட பின்னர் ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் இறந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது, பின்னர் ஆய்வகச் சோதனைகளில் ஆன்டிஃபிரீஸ் மற்றும் பிரேக் திரவங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நச்சு இரசாயனமான டைதிலீன் கிளைகோல் (DEG) இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த சிரப்பில் 48.6 சதவீதம் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) இருப்பது கண்டறியப்பட்டது, இது சிறுநீரக செயலிழப்பு மற்றும் உட்கொண்டால் மரணத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படும் ஒரு நச்சு இரசாயனமாகும். இதன்பேரிலேயே அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிறுநீரக திசு பகுப்பாய்வில், அவர்கள் உட்கொண்ட இருமல் சிரப்பில் DEG என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாக, சிந்த்வாரா மாவட்ட ஆட்சியர் ஷீலேந்திர சிங், பயாப்ஸி அறிக்கைகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

cough syrup

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அஜய் பாண்டே, “சிந்த்வாரா மாவட்டத்தின் பராசியா பகுதியில் 11 குழந்தைகள் இறந்ததற்கு ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் சிரப்தான் காரணம்” என தெரிவித்தார். மறுபுறம், சிந்த்வாரா மாவட்டத்தில் குழந்தைகளின் தொடர்ச்சியான உயிரிழப்பால், மத்தியப் பிரதேச அரசு கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனையை மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக தடை செய்வதாக அறிவித்தது. அதேபோல், அக்டோபர் 1 முதல் தமிழக அரசும் இந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் மருந்தை தடை செய்துள்ளது.