amit shah pt desk
இந்தியா

"மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்.." - ம.பி. தேர்தல் பரப்புரையில் அமித்ஷா அளித்த பரபரப்பு வாக்குறுதி!

மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலில் மத்தியப்பிரதேச மக்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

webteam

மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில ;ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விதிஷாம மாவட்டம் சிரோஞ்ஜ் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக மூத்த தலைவர் அமித்ஷா பேசினார்.

election commission

அப்போது, மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலில் மத்தியபிரதேச மாநில மக்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் ஆகியோர் தங்களது வாரிசுகளை முதலமைச்சராக்க நினைப்பதாகவும், சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க நினைப்பதாகவும் அமித் ஷா விமர்சித்தார்.