ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.
தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த விவகாரம் மக்களவையிலும் எதிரொலித்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். 'ஆளுநரை திரும்ப பெறு' ' தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம்' 'நீட் தேர்வை ரத்து செய்' என தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து மக்களவையில் பேசிய டி.ஆர்.பாலு, ''ஆளுநரின் செயல்பாடுகள் முறையாக இல்லை. நீட் தேர்வு விலக்கு மசோதா 5மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவருக்கு கூட அவர் அனுப்பவில்லை. ஆர்ட்டிகள் 200, 201ன் படி குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்ப வேண்டும். ஆனால், ஆளுநர் அதை செய்யவில்லை'' என குற்றம்சாட்டினார்.