இந்தியா

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்பில் போராட்டம்

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்பில் போராட்டம்

webteam

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சட்டப் பேரவை உடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கிடையே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் அனைத்து கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில் ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அதன்படி இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், டி.ராஜா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.