shivrajkumar, dk shivakumar
shivrajkumar, dk shivakumar pt web
இந்தியா

லோக்சபா தேர்தல்: ஷிவ்ராஜ் குமாருக்கு அழைப்பு விடுத்த கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

Angeshwar G

கன்னடத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ஷிவ்ராஜ் குமார். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன். தமிழில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் இவரது கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. மிகச் சிறிய நேரமே திரையில் வந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்னைப் பற்றி பேச வைத்தார் சிவாண்ணா.

இந்நிலையில் அவரை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்துள்ளார் கார்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில துணை முதலமைச்சருமான டி.கே. சிவக்குமார். அம்மாநிலத்தில் எடிகா சமூகத்தின் மாநில மாநாட்டு பெங்களூருவில் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட சிவக்குமார் பேசுகையில், “கர்நாடகத்தில் லோக்சபா தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட ஷிவ்ராஜ்குமாரை கேட்டுள்ளேன். லோக்சபாவில் நுழைவதற்கு யாருக்கு வேண்டுமானாலும் சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய அவர், “திரைப்படத்தில் எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. வாய்ப்பை தவற விடாதீர்கள்” என தெரிவித்திருந்தார்.

dk shivakumar

இந்நிலையில் கர்நாடகத் துணை முதல்வரின் அழைப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஷிவ்ராஜ்குமார். இது தொடர்பாக கூறியுள்ள அவர், திரையில் நடித்து உங்களைக் கவர்வதற்கு வாய்ப்பளித்ததே என் தந்தை எனக்குக் கொடுத்த பரிசு. அத்தோடு எனது எல்லை முடிந்தது. உங்களுடன் இருந்துகொண்டே நான் நடித்தும் வருவேம். அரசியலிலும் சிறப்பாக பணி செய்யும் மக்கள் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

ஷிவ்ராஜ்குமாரின் மனைவியும், முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பாவின் மகளுமான கீதா சிவராஜ்குமார் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஷிவ்ராஜ்குமாரின் மைத்துனரான மது பங்காரப்பாவும் கர்நாடத்தில் கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.