“மணிப்பூர் சம்பவங்களுக்கு குரல் கொடுக்காமல் ஏன் அமைதி காத்தீர்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திவ்யா சத்யராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அண்ணா பல்கலை பாலியல் கொடுமையைக் கண்டித்து, சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் அண்ணாமலை அண்ணாவுக்கு சில கேள்விகள் என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார் நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ்.
அதில், “மணிப்பூர் விவகாரத்தில் அமைதி காத்தது ஏன்? குஜராத் கலவரத்தில் நடந்தது என்ன என்ற கேள்விக்கு ஏன் பதில் சொல்வதில்லை? கோவிட் பரவலைத் தடுக்க கூட்டம் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை மீறி சில தலைவர்கள் ரத யாத்திரை நடத்தியது” என்பது உள்பட 8 கேள்விகளை திவ்யா சத்யராஜ் எழுப்பியிருக்கிறார்.