புதிய நாடாளுமன்ற கட்டடம்
புதிய நாடாளுமன்ற கட்டடம் Twitter
இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

PT WEB

மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளன.

New Parliament and Modi

இது குறித்து டெல்லி காவல்துறையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதி அருகே மல்யுத்த வீரர்களின் போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் உட்பட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. அதைவேளையில் நாடாளுமன்ற திறப்பு விழா அன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மகளிர் பஞ்சாயத் அமைப்பினர் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Wrestlers Protest

இதையடுத்து மே 28 அன்று மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக டெல்லி காவல்துறை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் அமைப்பது, டெல்லி எல்லைப் பகுதியில் வாகன சோதனை சாவடிகளை அமைப்பது, கூடுதல் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பாக முழுமையாக ஆலோசிக்கப்பட உள்ளன.