இந்தியா

மக்களவை முடங்கியது வேதனை தருகிறது - சபாநாயகர்

webteam

மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை சுமுகமாக நடைபெறாதது வேதனை தருவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எம்பிக்கள் பதாகைகளுடன் அவைக்கு வருவதும் முழக்கங்களை எழுப்பி அவை நடுவே வந்து அமளியில் ஈடுபடுவதும் நமது பாரம்பரியம் அல்ல என வேதனை தெரிவித்தார். ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை மக்களவை 74 மணி நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது என்றும் மக்களவையில் 22 விழுக்காடு நடவடிக்கைகள் மட்டுமே நடைபெற்றது என்றும் அவர் கூறினார்.

ஓபிசி மசோதா உள்பட 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் , அவை மாண்பை குறைக்கும் வகையில் எம்பிக்கள் செயல்பட கூடாது என கேட்டு கொள்வதாகவும் ஓம் பிர்லா கூறினார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.