இந்தியா

விமான விதிமுறைகளை மீறியதாக விஸ்தாரா நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம்

Sinekadhara

விமானத்தை டேக் ஆப் செய்வது மற்றும் தரை இறங்குவதற்கான அனுமதி விதிகளை மீறியதற்காக விஸ்தாரா நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குநரகம்.

இந்தூர் விமான நிலையத்தில் விஸ்தாரா விமானத்தை தரையிறக்கும்போது கேப்டன் இல்லாமல் பஸ்ட் ஆபீஸர் மூலம் விமானத்தை தரை இறக்கியது. விதிமுறைகளை மீறியதாகக் கூறி விஸ்தாரா விமானத்திற்கு ரூபாய் பத்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தூர் விமான நிலையம் விமானத்தை தரை இயக்குவதற்கு கேப்டன் மட்டுமே முடிவு செய்ய முடியும் என உத்தரவு உள்ள நிலையில், பஸ்ட் ஆபீஸர் மூலமாக தரையிறக்கியது பெரும் குற்றமாக விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் கருதியுள்ளதுதான் இதற்கு காரணம்.

இதனால் விமான பயணிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதால் விமான விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை டேக் ஆப் செய்வது அல்லது தரை இறக்குவது மற்றும் இதர முடிவுகளை எடுப்பது விமானத்தின் கேப்டன் மட்டுமே. இருப்பினும் அவசர காலங்களில் முடிவுகளை எடுப்பதற்காக துணை பைலட்டுக்கு (பஸ்ட் ஆபீஸர்) அதிகாரம் உண்டு. கடந்த மாதம் ஏழாம் தேதி ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற்ற மறுத்த இண்டிகோ நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.