புதுச்சேரி முகநூல்
இந்தியா

புதுச்சேரி | மாலை 6 மணிக்கு மேல் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த தடை!

இதனை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

PT WEB

புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் மாலை 6 மணிக்கு மேல் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தி வருவதாக புகார் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மாணவர்களை பள்ளி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.