இந்தியா

திலீப்பின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - தந்தையின் ஈமச் சடங்கில் பங்கேற்க அனுமதி

திலீப்பின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - தந்தையின் ஈமச் சடங்கில் பங்கேற்க அனுமதி

rajakannan

கேரள நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவல் செப்.16 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள நடிகர் திலீப்பின் காவல் இன்றுடன் முடிகிறது. ஜாமீன் கோரி திலீப் இருமுறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், புதிதாக ஒரு மனு திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சமீபத்தில் உயிரிழந்த தனது தந்தையின் ஈமச் சடங்கில் பங்கேற்க திலீப் அனுமதி கோரியிருந்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இறந்த திலீப்பின் தந்தைக்கு வரும் செப்டம்பர் 6-ம் தேதி அலுவா மணப்புரத்தில் உள்ள இல்லத்தில்  ஈமச் சடங்கு நடைபெறவுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு மணி நேரம் மட்டும் சடங்குகளில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

ஈமச்சடங்கில் பங்கேற்ற பிறகு தொடர்ந்து செப்டம்பர் 16-ம் தேதி வரை திலீப் நீதிமன்ற காவலில் தொடர்ந்து இருப்பார். திலீப் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.