இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்... சமாஜ்வாதி கட்சியில் கருத்து வேறுபாடு

webteam

குடியரசுத் தலைவர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளரான மீரா குமாருக்கு வாக்களிக்குமாறு சமாஜ்வாதி எம்பி, எம்எல்ஏக்களுக்கு முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க தங்கள் கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் வலுவான வேட்பாளர் என்றும் அவருடன் ஏற்‌க‌னவே தாங்கள் நெருங்கிய உறவு வைத்திருந்தாகவும் முலாயம் குறிப்பிட்டிருந்தார்