ms dhoni
ms dhoni pt web
இந்தியா

15 கோடி நஷ்டம்; ராஞ்சி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்த தோனி

Angeshwar G

ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் லிமிட்டெடைச் சேர்ந்த மஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் என இருவர் மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ராஞ்சி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

MS Dhoni

2017 ஆம் ஆண்டு உலகளவில் கிரிக்கெட் அகாடமி அமைப்பது தோனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக திவாஹர் மற்றும் விஷ்வாஷ் இருவர் மீதும் தோனி வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை திவாஹர் கடைபிடிக்கவில்லை, உரிமைக் கட்டணத்தை செலுத்தவும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி லாபத்தை பகிர்ந்து கொள்ளவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்கள் மதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்வேறு முறை நினைவூட்டல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டன. இதன் காரணமாக ஆகஸ்ட் 15, 2021 அன்று ஆர்கா ஸ்போர்ட்ஸுக்கு வழங்கப்பட்ட அதிகார கடிதத்தை தோனி திரும்பப்பெற்றார். இதுகுறித்தான நோட்டீஸ்களை அனுப்பியும் பலனில்லை என தோனி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MS Dhoni

நிபந்தனைகள் மீறப்பட்டதால் தங்களுக்கு 15 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தோனி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை துபாயில் கொண்டாடிவிட்டு மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். கடந்த சில தினங்கள்முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன், தோனி அடுத்த சில தினங்களுக்குள் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான் பயிற்சியில் ஈடுபடுவார் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.