இந்தியா

எரிபொருள் இறக்குமதி குறைக்கப்பட வேண்டும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

webteam

பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதியை 10 சதவிகிதம் அளவுக்கு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தியுள்ளார். 

இந்தியாவில் பெட்ரோலிய எரிபொருள்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே செல்கிறது. கட்டுப்பாடில்லாத வானங்களின் பெருக்கத்தினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. புவி வெப்பமாதல், டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு என இந்தியா பல நெருக்கடிகளை சந்திக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புவி இயற்பியல் நிபுணர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தர்மேந்திரபிரதான், எரிசக்தித் துறையில் வளர்ச்சி காண்பது என்பது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார். 
தாம் பொறுப்பேற்ற பின் பெட்ரோலிய அமைச்சகம் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதியை 10 சதவிகிதம் அளவுக்கு குறைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.