திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 45 மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்தனர்.
கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளான இன்று இலவச தரிசனம் செய்ய வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளன. இலவச தரிசனத்திற்கு 45 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்தனர். ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்துக்கான நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் பெற்று வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு வந்தால் நான்கு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.