நேரில் குறைகளை கேட்டறிந்த தேவஸ்வம் போர்டு தலைவர் pt desk
இந்தியா

கானக பாதைகளில் சபரிமலை செல்லும் பக்தர்கள் - நேரில் குறைகளை கேட்டறிந்த தேவஸ்வம் போர்டு தலைவர்

சபரிமலைக்கு கானக பாதைகளில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்களை நேரில் சந்தித்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த் குறைகளை கேட்டறிந்தார்.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தின் அடர்ந்த 18 மலைகள் சூழ அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சபரிமலை. எரிமேலியில் இருந்து சபரிமலை வரை 45 கிலோமீட்டர் தூரமுள்ள பெருவழிப் பாதையும், வண்டிப் பெரியாறு அருகே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்திரத்தில் இருந்து புல்லுமேடு வழியாக செல்லும் 12 கிலோ மீட்டர் தூரமுள்ள பாதையும் பாரம்பரிய கானக பாதைகளாக உள்ளன.

நேரில் குறைகளை கேட்டறிந்த தேவஸ்வம் போர்டு தலைவர்

சாலைகளே இல்லாத புதர்மண்டிக் கிடக்கும் அடர் வனத்திற்குள், வன விலங்குகள் தாக்குதல் அச்சத்தோடு பக்தர்கள் நடை பயணமாக உடலை வருத்தி சபரிமலை வந்தடைகின்றனர். இந்நிலையில், சத்திரம் - புல்லுமேடு கானக பாதையில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களை முக்குழி அருகே நேரில் சந்தித்தார் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த். கானக பாதைகளில் வரும் போது பக்தர்கள் சந்திக்க நேர்ந்த குறைகளை கேட்டறிந்தார்.

குடிநீர் விநியோகம், பாதுகாப்பு மருத்துவ முகாம்களின் செயல்பாடு குறித்து பக்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். கானக பாதையை வழி சபரிமலை வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் விருப்பத்தை பரிசீலனை செய்யவதாகக் கூறிய தேவஸ்தான போர்டு தலைவர், பக்தர்களுக்கு சுக்கு நீர், பிஸ்கட் வழங்கி அனுப்பி வைத்தார்.