இந்தியா

மக்கள் கூட்டம் இல்லாததால் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர்

மக்கள் கூட்டம் இல்லாததால் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர்

webteam

போதுமான அளவு மக்கள் வராத காரணத்தால் புனே நகராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ரத்து செய்தார்.

புனேவின் திலக் சாலையில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பரப்புரைக் கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த நேரத்தில் அங்கு வந்த பட்னாவிஸ் அதிகளவில் கூட்டம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரம் பொறுத்துப்பார்த்த பட்னாவிஸ் கூட்டம் வராததால் பரப்புரைக் கூட்டத்தில் பேசாமல் சென்று விட்டார். இது தொடர்பாக விளக்கம் அளித்து பாரதிய ஜனதாக் கட்சி அவர் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் புறப்பட்டு சென்றதாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே புனேவில் பட்னாவிஸ் பரப்புரைக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதன் மூலம் மாநிலத்தில் காட்சிகள் மாறுவதை உணர்த்துவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் குறிப்பிட்டுள்ளார்.