இந்தியா

இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து! - மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்

jagadeesh

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வாடிகனில் இன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இக்காட்சிகளை அங்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்றும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து.... <a href="https://t.co/TZ7iFAv8gy">pic.twitter.com/TZ7iFAv8gy</a></p>&mdash; Mano Thangaraj (@Manothangaraj) <a href="https://twitter.com/Manothangaraj/status/1525522174958006272?ref_src=twsrc%5Etfw">May 14, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் தமிழகத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்க உள்ளார். தமிழகத்திலிருந்து புனிதர் பட்டம் பெறும் முதல் நபர் தேவசகாயம் என்பது குறிப்பிடத்தக்கது