இந்தியா

ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தமிழகத்துக்கு 2-வது இடம்: நிதி ஆயோக் பட்டியலின் அம்சங்கள்

ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தமிழகத்துக்கு 2-வது இடம்: நிதி ஆயோக் பட்டியலின் அம்சங்கள்

நிவேதா ஜெகராஜா

அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்கள் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. 

வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், அனைவருக்கும் குடிநீர், பாலின சமநிலை உள்ளிட்ட 16 தலைப்புகளில் 115 பணிகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கான பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்த செயல்பாடுகளை பொருத்தவரை கேரள மாநிலம் 75 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், இமாச்சல் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் 74 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஆந்திரா, கோவா, கர்நாடகா, உத்தராகண்ட், சிக்கிம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை இந்த பட்டியலில் பிடித்திருக்கிறது. உத்தர பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் கடைசி இடங்களில் உள்ளது. இதில் பீகார் மாநிலம்தான் மிக மோசமாக வெறும் 52 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

வறுமை ஒழிப்பை பொருத்தவரை, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுபவையாக உள்ளது. பசியின்மையை பொருத்தவரை கேரளா மற்றும் சந்திரர் மாநிலங்களும் பொது சுகாதாரத்தை பொருத்தவரை குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் சிறப்புடன் செயல்படுவதாக கூறி உள்ளது.

பொது சுகாதாரத்தில் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த குஜராத், இந்த ஆண்டு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது தமிழகத்தை பொருத்தவரை இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

கல்வியறிவு சிறப்புடன் செயல்படும் மாநிலங்களாக கேரளா மற்றும் சந்திரன் ஆகியவை உள்ள நிலையில், பாலின சமநிலையை சட்டீஸ்கர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள சிறப்பாக கையாள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. சுத்தமான குடிநீர் வழங்குவதில் கோவா மற்றும் லக்ஷதீப் சிறப்பாக செயல்படுவதாகவும், சுத்தமான எரிசக்தியை பொருத்தவரை ஆந்திரா - கோவா - ஹரியானா - தமிழ்நாடு - தெலங்கானா உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் சிறப்பாக செயல்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் இமாச்சல் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்த குஜராத் மற்றும் டெல்லி ஆகியவை சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமநிலையின்மையை குறைப்பதில் மேகாலயா மற்றும் சங்கர் மாநிலங்களும் நகரங்களை நிலையாக வைத்திருப்பதில் பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்படுத்த களில் திரிபுரா ஜம்மு-காஷ்மீர் ஆகியவை சிறப்பாக செயல்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒடிசா மற்றும் அந்தமான் ஆகியவை சரியாக செயல்படுவதாகவும் நிதி ஆயோக் அமைப்பு வகைப்படுத்தி உள்ளது

- நிரஞ்சன் குமார்