NCW  facebook
இந்தியா

பெண்களுக்கெதிரான வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறைகள்.. NCW தரவுகள் சொல்லும் அதிர்ச்சி உண்மைகள்!

’ கண்ணியமாக வாழ வேண்டும் ‘ என்பதை அடிப்படையாக கொண்டு 28% குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஜெனிட்டா ரோஸ்லின்

2024 ஆம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தால் (NCW) பெறப்பட்ட பெண்களுக்கு எதிரான 25,743 புகார்களில் 24% (6,237) குடும்ப வன்முறை காரணமாக நடந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றது. ’ கண்ணியமாக வாழ வேண்டும் ‘ என்பதை அடிப்படையாக கொண்டு 28% குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

டிசம்பர் 31, 2024 NCW இணையதளத்தில் வெளியான தரவுகளின் படி, 4383 (17%) வழக்குகள் வரதட்சணைக் கொடுமையாலும், 292 வழக்குகள் வரதட்சணையால் ஏற்பட்ட இறப்புகளாலும் பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு பதிவாகியுள்ள புகார்களில் அதிக வழக்குகள் பதிவானதில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

அதிக வழக்குகள் பதிவானது எங்கே? 

உத்தரப்பிரதேசம் (54% ) - 13, 868 வழக்குகள்

டெல்லி (9%) - 2, 245 வழக்குகள்

மகாராஷ்டிரா ( 5.1%) - 1, 317 வழக்குகள்

பீகார்(4.8%) - 1233 வழக்குகள்

மத்தியப்பிரதேசம் (4.2%) - 1,070 வழக்குகள்

ஹரியானா (4.1%,) - 1,048 வழக்குகள்

எந்தெந்த வழக்குகள்?

1550 (6%) molestation வழக்குகளும் ,

கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி - 1422 (5.5%) வழக்குகளும்

பாலியல் துன்புறுத்தல் - 1015 (4%) வழக்குகளும்

பின் தொடர்ந்தல் மற்றும் voyeurism - 600 க்கும் மேற்பட்ட வழக்குகளும்,

பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம் - 523 வழக்குகளும்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் - 205 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

COVID-19  க்கு முன்பு!

மேலும், கோவிட்க்கு முந்தைய நிலைகளில் இந்த வழக்குகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019 - 19, 730 வழக்குகளும்,

2020 - 23, 722 வழக்குகளும்,

2021 , 2022 - 30, 000 வழக்குகளும்,

COVID-19 தொற்றின் போது!

குடும்ப வன்முறைகள் கோவிட் தொற்றுக்காலத்தில் அதிகரித்துள்ளன என்பதை தரவுகள் காட்டுகிறது.

2019 - 2,960 வழக்குகளும்

2020 - 5,297 வழக்குகளும்

2021 - 6,688 வழக்குகளும்

2022 - 6,986 வழக்குகளும் பதிவாகியுள்ளது.