இந்தியா

வன்முறையால் இழப்பு: தேரா சச்சா அமைப்பிடமே வசூலிக்க உத்தரவு

வன்முறையால் இழப்பு: தேரா சச்சா அமைப்பிடமே வசூலிக்க உத்தரவு

Rasus

தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங்குக்கு ஆதரவாக நிகழ்த்தப்பட்ட வன்முறையால் ஏற்படும் இழப்புகளை அந்த அமைப்பிடம் வசூலிக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. ராம் ரஹிமின் ஆதரவாளர்கள் ஊடக வாகனங்கள், போலீசார், பொதுமக்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். வன்முறைகளில் 30 பேர் பலியானதாகவும் 250 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங்குக்கு ஆதரவாக நிகழ்த்தப்பட்ட வன்முறையால் ஏற்படும் இழப்புகளை அந்த அமைப்பிடம் வசூலிக்க பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள், தேரா சச்சா அமைப்பின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஜகதீப் சிங்குக்கு உச்சபட்ச பாதுகாப்பு அளிக்க ஹரியானா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு மிரட்டல் வருவதாக கூறப்படுவது குறித்து உளவுத் துறை தகவல் கிடைத்ததும், சிஆர்பிஎப் அல்லது சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிப்பது பற்றி முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.