இந்தியா

டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில், விமான சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில், விமான சேவை பாதிப்பு

webteam

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

வடஇந்தியாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத பனிமூட்டம் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றம் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து பிற பகுதிகளுக்கு புறப்படவிருந்த சில ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. மேலும் பனிமூட்டத்தின் காரணமாக ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதேபோல், பனிமூட்டத்தால் டெல்லியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.