பணமதிப்பு நீக்கத்தால் பயங்கரவாதம் குறையும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் கூறினார்.
1000 மற்றும் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்ததால் இந்தியாவில் பயங்கரவாதம் மற்றும் நக்சல் நடவடிக்கைகள் குறைந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். நாளை அவர் அமெரிக்காவுக்கு புறப்பட உள்ள நிலையில், காணொலிக் காட்சி மூலம் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேசுகையில் இதைக் கூறினார். பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதமும், சட்டீஸ்கரில் நக்சல் நடவடிக்கைகளும் குறைந்துள்ளது. தூய்மை இந்தியா மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.