டெமோ இவிஎம்
டெமோ இவிஎம் முகநூல்
இந்தியா

புனே: திருடுபோன டெமோ EVM மிஷின்.. பிரீஃப்கேஸ் என நினைத்து திருடியதாக சிக்கியவர்கள் வாக்குமூலம்

ஜெனிட்டா ரோஸ்லின்

பிரீஃப்கேஸ் என நினைத்து டெமோ இவிஎம் மிஷினை திருடி சென்ற சம்பவம் புனேவில் அரங்கேறியுள்ளது.

புனே நகரின், சாஸ்வாத்-நாராயண்பூர் சாலையில் உள்ள சாஸ்வாட் தாசில்தார் அலுவலகத்தில் அதிகாலை 3.45 மணி அளவில் இந்த திருட்டு நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த டெமோ இவிஎம் மிஷின் திருடுப்போனதை அறிந்த அதிகாரிகள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் அலசியதில் அடையாளம் தெரியாத 3 பேர் டெமோ இவிஎம் மிஷினை திருடியதாக தெரியவந்தது.

மேலும் காவல்துறையினர் இது குறித்து தெரிவிக்கையில், “பிரீஃப்கேஸ் என நினைத்து டெமோ இவிஎம் மிஷினை திருடி சென்றுள்ளார்கள். மேலும், அதை என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கி எரிந்துள்ளனர்.” என தெரிவித்துள்ளனர்.

திருடிய மூன்று நபர்களில், சிவாஜி பண்ட்கர் மற்றும் அஜிங்க்யா ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாம் நபரை குறித்த தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து, இவர்களின் மீது எஃபஐ ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாவத் என்பவருக்கு சொந்தமான கொட்டகையில் இருந்து தூக்கி வீசப்பட்ட மின்னணி இயந்திரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளநிலையில் மூன்றாவது நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டெமோ யூனிட் உட்பட மொத்தம் 40 இவிஎம்கள் அலுவலக ஸ்டோர்ரூமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.