இந்தியா

டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

webteam

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடந்த போராட்டத்தில் இருதரப்பினரும் ஆங்காங்கே மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு டெல்லியிலுள்ள சந்துபாக் பகுதியில் அங்கித் சர்மா என்ற காவலரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர், டெல்லி காவல்துறையின் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்தவர். வன்முறையில் ஈடுபட்டவர்களின் தாக்குதலில் அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கி குண்டு காயம்பட்டவர்கள், வன்முறையின்போது தப்பிக்க சுவர் ஏறி குதித்தபோது காயமடைந்தவர்கள் என 189 பேர் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறை சம்பவங்கள் நடந்த கோகுல்புரி, ஜோஹிர்புரி, பாபர்பூர் ஆகிய பகுதியில் அதிரடிப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து பேரணி சென்றார்.