இந்தியா

டெல்லி வன்முறை: போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது..!

டெல்லி வன்முறை: போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது..!

Rasus

டெல்லி கலவரத்தின்போது போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்‌ற ‌அதே இடத்தில் அச்சட்டத்திற்கு ஆதரவாக சிலர் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில், வன்முறை சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின்போது, போலீஸை துப்பாக்கி காட்டி ஒரு நபர் மிரட்டியிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை உடனே கைது செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் எழுந்தன.

அதேசமயம் போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் தலைமறைவானர். போலீசார் விசாரணையில் அந்த நபர் ஷாருக் என்பதும், அவர் உத்தரப்பிரதேசத்தில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தற்போது அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.