இந்தியா

1.2 இலட்சம் சுகாதாரப்பணியாளர்களுக்கு 2.74 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள்: அரவிந்த் கேஜ்ரிவால்

Veeramani

1.2 இலட்சம் சுகாதாரப்பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக, சுமார் 2,74,000 கோவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் கூறினார்.

மத்திய அரசிடமிருந்து, டெல்லி அரசு பெற்றுள்ள சுமார் 2,74,000 கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள், சுமார் 1.2 லட்சம் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்க போதுமானவை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். " இந்த தடுப்பு மருந்துகள் மூலமாக ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் கிடைக்கும், எந்தவொரு தற்செயலான சம்பவத்தையும் சந்திக்க மத்திய அரசு 10% கூடுதல் டோஸ்களை வழங்குகிறது. இந்த கோவிட் தடுப்பூசி திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வழங்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அனைத்து மாநிலங்களும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது.